5400 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அப்துல்லா பர்கோர்டி! யார் இவர்? வெளியான அதிர்ச்சி தகவல்
ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ பிரிவான அல்-கசாம் படையின் மேற்கு கரை தளபதியாக இருந்தவர் அப்துல்லா பர்கோட்டி(Abdullah Barghouti) இவருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் 67 ஆயுள் தண்டனை விதித்து உலகில் எந்த நாடும் வழங்காத தண்டனையை வழங்கியது.
இதன்படி அவர் சுமார் 5400 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் அர்த்தம் அவர் மரணிக்கும் வரை சிறையில் இருக்க வேண்டும்
இப்படி ஒரு தண்டனை வழங்கும் அளவிற்கு அவர் எப்படி ஆக்கிரமிப்பு நிர்வாகத்தின் தூக்கத்தை கெடுத்தார் என்து ஆராயப்பட்டு வருகின்ற விடயம்.
ஹமாஸின் என்ஜினியர்
இந்த நிலையில், இவரை இஸ்ரேல் ஊடகங்கள் ஹமாஸின் என்ஜினியர் என அழைக்கின்றனர். அத்தோடு, இஸ்ரேலுக்குள் நடைபெற்ற முக்கிய தாக்குதல் ஒன்றுக்கு தேவையான ஆயுதங்களை அவரே வடிவமைத்து உருவாக்கினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு
கடந்த 2003 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், தொடர்ந்து 21 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் இராணுவ வீரர் கிளாட் சாலட் விடுதலையின் போதே, அப்துல்லா பர்கோட்டியை விடுவிக்க வேண்டுமென ஹமாஸ் வலியுறுத்தியது. ஆனால் அதனை இஸ்ரேல் ஏற்கவில்லை.
தற்போது ஹமாஸ் வழங்கிய பட்டியலில் அப்துல்லா பர்கோட்டியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஹமாஸின் பட்டியல்
இதனைப் பார்த்து ஆக்கிரமிப்பு நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஹமாஸ் பட்டியலில் அடுத்து உள்ளவர் வார்மன் பர்கோட்டி இவர், மர்வான் பர்கோட்டியின் உறவினர்.
இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதலுக்கான நான்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 40 ஆண்டுகள் தண்டனை இவருக்கு வழங்கப்பட்டது. இவர் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல, மக்மூத் அப்பாஸின் பத்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்
இவரையும் விடுவிக்க வேண்டுமென ஹமாஸ் வலியுறுத்தி உள்ளது.
இஸ்ரேலை அதிர வைத்த மேலும், பல முக்கிய பலஸ்தீனிய தலைவர்களின் பெயர்கள் ஹமாஸின் பட்டியலில் உள்ளது. ஏற்கனவே 300 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இனி வரும் காலங்களில் முக்கிய பலஸ்தீனிய தலைவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தெரியவருகிளன்றது. இது ஹமாஸுக்கு மாபெரும் வெற்றியாக இருக்கும் என கருதப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |