விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு
Sri Lankan Tamils
Trincomalee
By Independent Writer
Courtesy: H A Roshan



கிண்ணியா வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான MAF. ஆரா தில்பர் (தரம் - 07, 1 ஆம் இடம்), A.F. அஸீம் (தரம் - 09, 1 ஆம் இடம்) மற்றும் A.N. பாத்திமா நர்ஜிஸ் (தரம் - 09, 3 ஆம் இடம்) ஆகியோரையும் இம்மாணவர்களை வழிப்படுத்திய விஞ்ஞானப் பிரிவு ஆசிரியைகளான M.A.F. பெனாஸிர் மற்றும் A.L. சுஜானா ஆகிய ஆசிரியைகளும் பாடசாலை முதல்வர் M.N.A. நஷ்ரப் சேரினால் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


