இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Sri Lanka Ministry of Health Sri Lanka HIV Symptoms
By Laksi Aug 17, 2024 08:54 AM GMT
Laksi

Laksi

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 0.03 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டாலும், தற்போது அந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தற்போது நாடு முழுவதும் சுமார் 3,500 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கூறியுள்ளார்.

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

அதிகரிக்கும் அபாயம்

அதுமட்டுமன்றி கிட்டத்தட்ட 50 குழந்தைகள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் STD மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரச்சாரத்தின் சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Hiv Patients Increased In Sri Lanka

தற்போது கண்டறியப்பட்ட நோயாளிகளில் ஏறக்குறைய 81 சதவீதம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எதிர்காலத்தில் இந்த நோயின் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இது குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம் என்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

அலி ஸாஹிர் மௌலானா மீது ஒழுக்காற்று நடவடிக்கை..!

அலி ஸாஹிர் மௌலானா மீது ஒழுக்காற்று நடவடிக்கை..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW