புதிய வரி சதவீத அறிவிப்பால் வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு
வாகனங்களுக்கான புதிய வரி சதவீதத்தை அரசு அறிவித்துள்ளதையடுத்து, வாகன சந்தையில் தற்போது கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 05 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் இறக்குமதியை மீள ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய அரசாங்கம், எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி சதவீதத்தை விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அண்மையில் அறிவித்தது.
இதேவேளை, இலங்கையில் வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் குறைந்த மட்டத்தில் இருக்கும் நிலையில், கட்டுப்பாடுகள் இன்றி வாகனங்களை இறக்குமதி செய்தால் மீண்டும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்படலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்நிய செலாவணி...
மேலும், நாட்டின் சரக்குக் கணக்கில் நிலுவைத் தொகையை நேர்மறை மதிப்பில் பராமரிக்க அரசு செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
தொடர்ந்தும், இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல, வாகன இறக்குமதியை உரிய முறையில் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் மீண்டும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |