புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: ஆராய விசேட குழு நியமனம்

Ministry of Education Grade 05 Scholarship examination Education
By Laksi Sep 28, 2024 01:20 PM GMT
Laksi

Laksi

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் 7 நிபுணர்களை கொண்ட சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்  தெரிவித்துள்ளார்.

அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்

அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்

குழு நியமனம்

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமையினால் பிரச்சினையான சூழ்நிலை உருவானதுடன், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: ஆராய விசேட குழு நியமனம் | Gread 5 Scholarship Exam Paper Issue

அத்துடன், புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளைஆரம்பித்திருந்ததோடு, கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதானிகளும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை கருத்தில் கொண்டு மீண்டும் பரீட்சை நடத்தப்படுமா? இல்லையா? குறித்த குழு தீர்மானிக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடிய ரவூப் ஹக்கீம்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடிய ரவூப் ஹக்கீம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW