அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விற்பனை செய்ய பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை, அரலிய குழுமத்தின் தலைவர் டட்லி சிறிசேன இன்றையதினம் (28) அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இன்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் வர்த்தகம் செய்ய தீர்மானித்துள்ளோம்.
அரசிக்கு புதிய விலை
நிபுன குழும தலைவர் மற்றும் நிவ் ரத்ன குழும தலைவர் ஆகியோரிடமும் கலந்துரையாடினேன், அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
இன்று முதல் அரிசியை அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையில் விற்கும் வகையில் எங்கள் அரிசியை விடுவிப்போம் என்று ஒட்டுமொத்த வர்த்தக சமூகத்திடமும் கேட்டுக்கொள்கிறேன். ஜனவரி 20 வரை மட்டும் இந்த ஆதரவு வழங்கப்படும்.
இந்த திகதியை தேர்ந்தேடுத்தற்கு காரணம், சந்தைக்கு புதிய அறுவடைகள் வருகின்றன, அதன் போது எங்களுக்கு நெல்லுக்கு புதிய விலையும், அரசிக்கு புதிய விலையும் வேண்டும். அதனால் தான்.”என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |