இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடிய ரவூப் ஹக்கீம்

Srilanka Muslim Congress Rauf Hakeem Sri Lanka India
By Laksi Sep 28, 2024 09:25 AM GMT

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடிய ரவூப் ஹக்கீம் | Meet With High Commissioner Of India Raoob Hakeem

அதன்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அத்துடன் புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW