புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்:அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

Sri Lanka Cabinet Grade 05 Scholarship examination Education
By Laksi Dec 02, 2024 08:45 AM GMT
Laksi

Laksi

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மூன்று வினாக்கள் கசிந்துள்ள நிலையில் அவற்றுக்கான முழுமையான புள்ளிகளை மாணவர்களுக்கு வழங்க அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை  சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சை மீண்டும் நடத்துவது பொருத்தமானதல்ல எனவும் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ பதவிப்பிரமாணம்

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ பதவிப்பிரமாணம்

மனு மீதான விசாரணை

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்:அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி | Grd 5 Scholarship Exam Paper Issue Free Points

இந்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தக் கோரி, சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மனு மீதான விசாரணையை டிசம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலைத்திருத்தம் : அதிருப்தியில் மக்கள்

எரிபொருள் விலைத்திருத்தம் : அதிருப்தியில் மக்கள்

ஒழிக்கப்பட வேண்டிய இலஞ்சம் துணிந்து செயல்படும் அரசாங்கம் : முனீர் முழப்பர்

ஒழிக்கப்பட வேண்டிய இலஞ்சம் துணிந்து செயல்படும் அரசாங்கம் : முனீர் முழப்பர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW