புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் கசிந்த மூன்று வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடத்தப்பட்ட பரீட்சை நிலையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் பரிந்துரை
அவர் மேலும் தெரிவிக்கையில், நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
இது தொடர்பான முழுமையான அறிக்கையை செயலாளர் ஊடாக பிரதமரிடம் சமர்ப்பித்தோம். அறிக்கைகளை மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி இந்த தீர்மானத்திற்கு வந்தோம்.
இதன்போது, அதற்கு தீர்வாக, மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்குவதாக நேற்று அறிவித்தோம். விடையளித்த மற்றும் விடையளிக்காத அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்க தீர்மானத்தோம்.அதன்படி, மிக விரைவாக மதிப்பீடுகளைச் செய்து பெறுபேறுகளை வெளியிட முடியும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |