பாடசாலை கல்வி முறையில் புதிய மாற்றங்கள்

Ministry of Education Sri Lankan Peoples Sri Lankan Schools Education
By Rakshana MA a month ago
Rakshana MA

Rakshana MA

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று மற்றும் ஆறாம் தர பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஏனைய தரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது, ஆனால் 10ம் தர பாட முறைமை பகுதியளவில் மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் அசமந்த நிலையிலேயே கிழக்கு மாகாண சபை பயணிக்கிறது - இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

இன்னும் அசமந்த நிலையிலேயே கிழக்கு மாகாண சபை பயணிக்கிறது - இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

புதிய கற்றல் வழிகாட்டிகள் 

இந்த மூன்று தரங்களிலும் புதிய கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறை 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வகுப்பறைகளில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலை கல்வி முறையில் புதிய மாற்றங்கள் | Grade 1 To 6 Syllabus Change In Sri Lanka

மேலும், அமைச்சரவை பத்திரங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், தொகுதிகளைத் தயாரித்தல், புத்தகங்களைத் தயாரித்தல் போன்ற சீர்திருத்தச் செயற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு வேலையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம்

வெளிநாட்டு வேலையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம்

அம்பாறையில் மனைவியை தாக்கிய கணவன் : தேடுதலில் பொலிஸார்

அம்பாறையில் மனைவியை தாக்கிய கணவன் : தேடுதலில் பொலிஸார்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW