அம்பாறையில் மனைவியை தாக்கிய கணவன் : தேடுதலில் பொலிஸார்

Ampara Sri Lankan Peoples Crime Kalmunai
By Rakshana MA Mar 03, 2025 09:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையில் மனைவியை தாக்கிவிட்டு கணவன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தம்பதிகள் இடையே கருத்து முரண்பாடு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, அம்பாறை மாவட்டம் கல்முனையிலுள்ள கடற்கரைப்பள்ளி வாசல் அருகில் நேற்று(02) இரவு இடம்பெற்றுள்ளது.

ரமழான் நாள் 2 : தியானம் மற்றும் துஆ செய்யுங்கள்

ரமழான் நாள் 2 : தியானம் மற்றும் துஆ செய்யுங்கள்

தேடுதல் பணியில் பொலிஸார்

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மனைவி கணவன் மீது முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளார்.இந்த முறைப்பாட்டிற்கமைய பெண்கள் சிறுவர் முறைப்பாட்டு பிரிவு பொலிஸ் குழுவினர் தேடுதல் மேற்கொண்டு தலைமைறைவாகியுள்ள குடும்பஸ்தரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அம்பாறையில் மனைவியை தாக்கிய கணவன் : தேடுதலில் பொலிஸார் | Husband Who Attacked Wife In Ampara Absconds

மேலும் குறித்த சம்பவத்தில் சுமார் 38 வயதுடைய நிந்தவூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

சம்மாந்துறை பகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகள்!

சம்மாந்துறை பகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகள்!

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW