மக்களது ஆசைகளை உதாசீனம் செய்யும் அரசாங்கம்..!
அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்து வருவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்ற போர்வையில் அரசாங்கம் தங்களது தத்துவாசிரியரான ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அரசாங்கம் விதித்து வரும் வரிகள் குறித்து மக்கள் எள்ளி நகையாடத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பெயர்
ஜனாதிபதியை தற்பொழுது மக்கள் அநுரகுமார என அழைக்காது வரிகுமார என அழைக்கத் தொடங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் 30 வீத வரி காரணமாக இலங்கைப் பொருட்களின் விலைகள் அமெரிக்காவில் 30 வீதத்தினால் உயர்வடையும் எனவும் இதனால் விற்பனை வீழ்ச்சியடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் கைத்தொழிற்துறை வீழ்ச்சியடைந்து மக்கள் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |