தெங்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது புதிய திட்டம்
                                    
                    Cocoa fruit
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Coconut price
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை தொடர்பான தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு வழங்கவும் "பொல் தெஸதிய" என்ற விசேட திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.
இதன் முன்னோடித் திட்டத்தின் முதல் கட்டம் நேற்று (14) முதல் 31 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றது.
தெங்கு செய்கை
மேலும் அதன் ஆரம்ப நிகழ்வு இன்று(14.07.2025) யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் ஆரம்பித்து வைக்கப்ட்டது.

இந்தத் திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, கோப்பாய், உந்துவில், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணத்தை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    