இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள பெருமளவு நிவாரணம்

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Nalin Fernando
By Laksi Jul 24, 2024 05:32 AM GMT
Laksi

Laksi

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு எதிர்வரும் சில மாதங்களில் பெருமளவு நிவாரணம் கிடைக்கும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகள் தற்போது பலன்களை பெற்று வருவதாக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முட்டை உற்பத்தி

மேலும் தெரிவிக்கையில், முட்டை உற்பத்தி குறையும் போது முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு இல்லை என்றால் உற்பத்தியாளர் தமது பொருட்களை சரியான விலையில் வழங்கி நுகர்வோரை பாதுகாக்க வேண்டும்.

இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள பெருமளவு நிவாரணம் | Government Announced Many Reliefs For People Of Sl

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு எனக்கு உள்ளதோடு, முட்டை உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நான் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்கின்றேன்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

எரிவாயு தட்டுப்பாடு 

மேலும், சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சின் கீழ் உள்ளதால், வாடிக்கையாளர் தரப்பில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகள் வந்தால் அது குறித்து விவாதிப்போம்.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள பெருமளவு நிவாரணம் | Government Announced Many Reliefs For People Of Sl

மேலும், தற்போதைய நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் அதைத் தீர்க்க முடியாவிட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளோம்” எனவும்  அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW