கற்பிட்டி கடற்பகுதியில் தங்கம் அடங்கிய பொதி மீட்பு..!
கற்பிட்டி- தோராயடி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 4 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் வழி ஊடான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட வழக்கமான சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
அத்தோடு, குறித்த தங்கத்தை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கண்ணாடி இழை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே தங்கப் பொதியை மூழ்கடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், மீட்கப்பட்ட தங்கம் மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்கவிலுள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |