நாடளாவிய ரீதியில் நேற்று நடத்தப்பட்ட 780 யுக்திய சுற்றிவளைப்புக்கள்

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 07, 2024 07:10 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் நேற்று (06) 780 யுக்திய சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுக்திய நடவடிக்கையின் கீழ் நடத்தப்படும் போதைப்பொருள் சோதனைகள் குறித்து பொலிஸ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது 26 பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் இவரே! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் இவரே! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு

யுக்திய நடவடிக்கை

இதில் 22 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படவுள்ளதாகவும், சில சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், மேலும் சிலர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று நடத்தப்பட்ட 780 யுக்திய சுற்றிவளைப்புக்கள் | Yukthiya Operation Many Others Were Arrested

மேலும், இந்த நடவடிக்கையின் போது மேல் மாகாணத்தில் 503 சுற்றிவளைப்புகளும், தென் மாகாணத்தில் 62 சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஏறாவூர் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் இரு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

ஏறாவூர் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் இரு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW