ஜனாதிபதி வேட்பாளர் இவரே! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு

Namal Rajapaksa Sagara Kariyawasam
By Mayuri Aug 07, 2024 03:49 AM GMT
Mayuri

Mayuri

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை களமிறக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

பத்தரமுல்லை - நெலும்மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சாகர காரியவசம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

பின்வாங்கிய தம்மிக்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் இவரே! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு | Sri Lanka Podujana Peramuna S New Announcement

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே இன்று இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW