அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை: விசாரணைகள் தீவிரம்

Ampara Elephant Eastern Province
By Laksi Aug 07, 2024 08:12 AM GMT
Laksi

Laksi

அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த யானையின் சடலம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை சின்ன கொக்கநாரை வயல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

யானையின் சடலம் இருப்பதை அவதானித்த விவசாயிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் நேற்று நடத்தப்பட்ட 780 யுக்திய சுற்றிவளைப்புக்கள்

நாடளாவிய ரீதியில் நேற்று நடத்தப்பட்ட 780 யுக்திய சுற்றிவளைப்புக்கள்

இறப்பிற்கான காரணம் 

இதனையடுத்து, குறித்த யானையின் இறப்பு தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் யானையின் இறப்பிற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

மேலும்,  வனஜீவராசிகள் திணைக்களம் யானையின் மரணம் தொடர்பான காரணத்தை உடற்கூற்று மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் தொடரும் வன்முறை: ரணில் கூறியுள்ள விடயம்

பங்களாதேஷில் தொடரும் வன்முறை: ரணில் கூறியுள்ள விடயம்

பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW