சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்
சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda Aththe Gnanasara Thero) சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் சாதாரண கைதிகள் தங்குமிடத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
சிறைத்தண்டனை
எனினும், அவருக்கு சுகவீனம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, மறுநாளே அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆகவே, தற்போது இவர் சிறைச்சாலையின் மூன்றாம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |