கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் தெளிவூட்டல் செயலமர்வு

Batticaloa Anura Kumara Dissanayaka Eastern Province Clean Sri lanka
By Laksi Jan 10, 2025 10:05 AM GMT
Laksi

Laksi

கிளீன் சிறிலங்கா (Clean Srilanka) கருத்திட்டத்தை செயற்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் கடமையாற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (10) இடம்பெற்றுள்ளது.

சுற்றாடல், சமூக மற்றும் ஒழுக்க நெறிமுறை அணுகல் ஊடாக விரிவான மாற்றப்பட்ட செயன்முறை ஒன்றின் மூலம் மேம்பட்ட சமூகம் ஒன்றினை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் "Clean Srilanka" கருத்திட்டம் கடந்த (01.01.2025)  திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி கருத்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டமே ஜனாதிபதி செயலகத்தின் உயரதிகாரிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் அதிரடியாக கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் அதிரடியாக கைது

செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் ஐனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் ஏ.கவிதா தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் தெளிவூட்டல் செயலமர்வு | Batti Regarding Clean Sl Clarification Session

இலங்கையின் தேசிய கலாசார மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தேசிய திட்டமாகிய இத்திட்டத்தின் அரச உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் குறித்த விசேட செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான  சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஏனைய அனைத்து திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery