நிவாரணப் பயனாளிகளின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்க புதிய வர்த்தமானி வெளியீடு
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் அஸ்வசும நலன்புரி உதவித்தொகை கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் சலுகைகளை செலுத்தும் முறை தொடர்பான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி நிதியமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால்(Anura Kumara Dissanayaka) வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த மே மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, வறிய குடும்பத்திற்கான 8,500 ரூபா கொடுப்பனவும், மிகவும் வறிய குடும்பத்திற்கான 15,000 ரூபா கொடுப்பனவு முறையே 10,000 ரூபாவாகவும் 17,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மற்ற பிரிவினருக்கான கொடுப்பனவுத் தொகைகள் திருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |