அரிசி பற்றாக்குறைக்கு தீர்வு
பொலன்னறுவையில்(Polannaruwa) உள்ள சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் சந்தையில் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் தீர்வுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவையில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தட்டுப்பாட்டுக்கான தீர்வுகள்....
அத்துடன், பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் அரிசி பாவனை அதிகரித்துள்ளதன் பின்னணியில் சந்தையில் உள்ள அரிசி இருப்புகளின் நிலை குறித்து விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், சில பிரதேசங்களில் இன்னும் பல வகையான அரிசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் தொன் அரிசியின் தொகையும் எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைய உள்ளது.
மேலும், இவ்வாறான பின்னணியில் இன்னும் சில பகுதிகளில் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |