ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது வீண் செயலாகும்: சுமந்திரன் எம்.பி பகிரங்கம்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது வீண் செயலாகும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளரை கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாகவும், அதற்காக தமது ஆதரவு கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளர்
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பான தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் விடயமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆட்சிக்கு வரும் நோக்கில் பொது வேட்பாளரை முன்வைக்க முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், பிரதான வேட்பாளர்கள் தமது விஞ்ஞாபனங்களை முன்வைத்தவுடன் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |