சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு

Dr Wijeyadasa Rajapakshe
By Mayuri Jul 29, 2024 07:09 AM GMT

தாம் வகித்துவந்த சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை தாம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்புகள்

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுப் பொறுப்புகளை விஜயதாச ராஜபக்ச விகித்து வந்தார்.

சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு | Vijayadasa Resigned From All Responsibilities

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அவர் அறிவித்திருந்த நிலையில் இந்த பதவி விலகல் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW