மட்டக்களப்பில் கொட்டித்தீர்த்த மழை! பாதிக்கப்பட்ட போக்குவரத்துக்கள்

Sri Lankan Peoples Climate Change Eastern Province Floods In Sri Lanka
By Rakshana MA Jan 20, 2025 12:35 PM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த சில காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மண்டூர் - வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப் பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் விளைவால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

பாதிக்கப்பட்டுள்ள வீதிகள் 

இந்த நிலையில், இன்று(20) காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பயணம் பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கொட்டித்தீர்த்த மழை! பாதிக்கப்பட்ட போக்குவரத்துக்கள் | Floodgates Of Main Reservoirs Opened In Batticaloa

போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பாலையடிவட்டை- வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர்-  ராணமடு வீதி, வெல்லாவெளி - உகன வீதிகளில் வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப்பகுதிக்கான பல்வேறு போக்குவரத்துப்பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல் : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கம் வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல் : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்காவில் டிக்டொக் தடை நீக்கம்! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டிக்டொக்

அமெரிக்காவில் டிக்டொக் தடை நீக்கம்! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டிக்டொக்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery