வடக்கு கிழக்கு மக்களை தெற்கிலிருந்து பிரிக்கிறதா சட்டம்..! இம்ரான் கேள்வி
சுருக்கு வலை தொடர்பாக வடக்கு, கிழக்கில் ஒரு சட்டம் தெற்கில் வேறு ஒரு சட்டம் உள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வினவியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் கடற்தொழில் அமைச்சரிடம் இந்த விடயத்தை வினவியுள்ளார்.
சட்டரீதியான வலைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், 1986ஆம் ஆண்டு சுருக்கு வலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின்படி 3/8 (0.375) அங்குல கண் அளவுக்கு மேற்பட்ட சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் வழங்கப்படலாம் என உள்ளது.
ஆகவே, வர்த்தமானி அறிவித்தலின் படி 3/8 அங்குலத்துக்கு மேற்பட்ட கண் உள்ள வலைகள் அனைத்தும் சட்டரீதியான வலைகள்.
ஆனால் வடக்கு கிழக்கில் 3/8 அங்குலத்துக்கு மேற்பட்ட வலைகள் அதாவது சட்டரீதியான வலைகள் சட்டவிரோத வலைகள் என கைது செய்யப்படுகின்றன.
ஆனால் இதே வலைகள் காலி மாத்தறை கடற்கரையில் இருக்கிறது. அதை கைது செய்யவும் யாருமில்லை தடை செய்யவும் யாருமில்லை இப்பொழுது அமைச்சர் சென்றால்கூட காலி மாத்தறை கடற்கரையில் சுருக்கு வலையை காணலாம்.
சுருக்கு வலை சட்டம்
சுருக்கு வலை தொடர்பாக வடக்கு, கிழக்கில் ஒரு சட்டம் தெற்கில் வேறு ஒரு சட்டம் உள்ளதா? ஆகவே அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலை எது தடை செய்யப்பட்ட சுருக்கு வலை எது என அமைச்சர் சபைக்கு தெளிவுப்படுத்த முடியுமா? வடக்கு கிழக்கில் கைது செய்யப்படும் வலைகள் தடை செய்யப்பட்ட வலைகள் எனின் 1986ஆம் ஆண்டு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 3/8 அங்குலம் என்பதை திருத்த முடியுமா?
அத்துடன் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தரும் அட்டைகளை இரவில் மட்டுமே பிடிக்க முடியும் என்பதால் அட்டைகளை பிடிக்கும் அனுமதியை மட்டும் மீண்டும் வழங்க முடியுமா என்பதையும் இது தொடர்பாக NARA நிறுவனம் ஏதாவது வழிகாடடல்களை வழங்கியுள்ளதா என்பதை அமைச்சர் சபைக்கு தெளிவுபடுத்த முடியுமா என கோரியுள்ளார்.
caநாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |