O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பத்திகதி அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
மேலும், பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள 1911 என் இலக்கத்திற்கு அழைக்கலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் தேவைப்பட்டால், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 க்கு அழைப்பதன் மூலமோ அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் தொலைபேசி இலக்கமான 0112-785922, 0112-784208, 0112-786616 மற்றும் 0112-784537 ஆகியவற்றின் மூலமோ விசாரணைகளை மேற்கொள்ளலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 3,664 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 474,147 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |