மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - (Batticaloa ) கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (13) பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடற்றொழில் நடவடிக்கைக்காக நேற்றையதினம் படகு மூலம் இரண்டு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
உயிரிழப்பு
இந்தநிலையில், இன்று (13.12.2024) காலை 6 மணியளவில் மீண்டும் கரைக்கு திரும்பும் போது முகத்துவாரப் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது, ஒருவர் கடற்றொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மற்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் திராய்மடுவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |