சஜித்தின் பிரசார கூட்டத்தில் விபத்து: 7 பேர் காயம்

Kandy Sajith Premadasa Sri Lanka
By Laksi Sep 09, 2024 01:07 PM GMT
Laksi

Laksi

 சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று (09) கண்டிமத்திய சந்தைக்கு முன்பாக பிரசாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை வெடிக்கச் செய்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பொலிஸார் 5 பேர் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் பயிலுனர்கள் தொழுகைக்கு செல்வதற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் பயிலுனர்கள் தொழுகைக்கு செல்வதற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வைத்தியசாலையில் அனுமதி 

பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேலதிகமாக பொதுமக்களில் இருவரும் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சஜித்தின் பிரசார கூட்டத்தில் விபத்து: 7 பேர் காயம் | Firecrackers Burst Sajith Rally 5Policemen Injured

இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற போது கடமையில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்றுள்ள மேற்படி பிரசார கூட்டம் கண்டியில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் விரைவில் தீர்மானம்

பாடசாலை விடுமுறை தொடர்பில் விரைவில் தீர்மானம்

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு: வெளியான தகவல்

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு: வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW