பாடசாலை விடுமுறை தொடர்பில் விரைவில் தீர்மானம்
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எற்ற முறையில் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு முறையான கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பாடசாலைகளை பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ள நிலையில், 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் வாக்களிப்பு நிலையங்களை தயார்படுத்தும் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் பாடசாலைகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படக்கூடும் என்பதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஏற்பாடு
இந்நிலையில் பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான (21ஆம் திகதி) அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், (18), (19) மற்றும் 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வாரத்தில், மற்றும்16 மற்றும் 17ம் திகதி அரசு விடுமுறை காரணமாக மீதமுள்ள நாள் குறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |