முஸ்லிம் பயிலுனர்கள் தொழுகைக்கு செல்வதற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Ampara Sri Lanka Eastern Province
By Laksi Sep 09, 2024 10:38 AM GMT
Laksi

Laksi

நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் முஸ்லிம் பயிலுனர்களையும் உத்தியோகத்தர்களையும் தொழுகைக்கு பள்ளிவாசல் செல்ல தடை விதித்தது மற்றும் பயிற்சி, ஏனைய நடவடிக்கைகள் சீரான முறையில் இயங்கவில்லை எனக் கூறி மாவட்ட பிரதிப் பணிப்பாளரின் இந்த நடைமுறையினை கண்டித்து, பயிலுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (09) நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த வியாழக்கிழமை (6) நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களாகிய எங்களை இங்கு தலைமைவகிக்கும் ரீ.வினோதராஜா என்ற பிரதிப் பணிப்பாளர் ஜும்மா தொழுகைக்கு மற்றும் எந்த தொழுகைக்கும் செல்ல அனுமதிக்க முடியாது என காலைக்கூட்டத்தில் எங்களுக்கு அறிவித்தார்.

சஜித்தின் வெற்றியை சீர்குலைக்க கோட்டாவின் கையாட்கள் திட்டம்: ரிஷாட் பகிரங்கம்

சஜித்தின் வெற்றியை சீர்குலைக்க கோட்டாவின் கையாட்கள் திட்டம்: ரிஷாட் பகிரங்கம்

இனவாத செயற்பாடு

இந்தநிலையில், இங்கு கடமை புரியும் சகோதர தமிழ் இனத்தைச் சேர்ந்த காவலாளி ஊடாக வெள்ளிக்கிழமையன்று (06.06.2024) ஜும்மா தொழுகைக்காக சென்றவேளை பிரதான நுழைவாயிலை மூடி தொழுகைக்காக செல்ல விடாமல் தடுத்ததன் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டது.

முஸ்லிம் பயிலுனர்கள் தொழுகைக்கு செல்வதற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் | Nindaur Muslim Students Protest

இதனையடுத்து, இங்கு கடமையாற்றும் முஹம்மட் நசீர் சேர் என்பவர் தலையிட்டு நுழைவாயிலை திறந்து எங்களை இறுதி நேரத்தில் தொழுகைக்கு செல்ல அனுமதி பெற்றுத்தந்தார்.

இவ்வாறான ஒரு நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நிந்தவூரில் முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைத்து தடை விதிக்கின்ற இவ்வாறான இனவாத செயற்பாடுகளை துடைத்தெறிந்து எமது உரிமைகள் பெற்றுத் தரப்பட வேண்டும்.

அம்பாறையில் சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த வட்டார அமைப்பாளர்கள் ஒன்றுகூடல்

அம்பாறையில் சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த வட்டார அமைப்பாளர்கள் ஒன்றுகூடல்

வாக்குறுதி

நாம் இதற்கு முன் பல இடங்களில் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். அங்கு ஜும்மா நேரத்திற்கு தொழுகைக்கு செல்லாவிட்டால் சகல முஸ்லிம் மாணவர்களையும் தொழுகைகாக விரட்டிவிடுவார்கள். அந்தளவிற்கு நல்ல மற்ற மதத்தை மதிக்கின்ற பண்பாடு ஏனைய இடங்களில் இருக்கின்ற நிலையில் இங்கு உரிமை மறுக்கப்படுகின்றது.

முஸ்லிம் பயிலுனர்கள் தொழுகைக்கு செல்வதற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் | Nindaur Muslim Students Protest

எனவே, நிந்தவூர் தொழுகைகுச் செல்ல வேண்டாமென்பது மன வேதனையைத் தருவதோடு, நிந்தவூரின் உலமாக்கள், பத்திஜீவிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊர்வாழ் மக்களாகிய அனைவரும் இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்து தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, குறித்த இடத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த விடயமாக உரியவர்களிடம் பேசி தீர்வினை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery