இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு: வெளியான தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Rice
By Laksi Sep 09, 2024 10:54 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் அரிசியை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவுக்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சஜித்தின் வெற்றியை சீர்குலைக்க கோட்டாவின் கையாட்கள் திட்டம்: ரிஷாட் பகிரங்கம்

சஜித்தின் வெற்றியை சீர்குலைக்க கோட்டாவின் கையாட்கள் திட்டம்: ரிஷாட் பகிரங்கம்

நெல் சந்தைப்படுத்தல்

இந்த நிலையில், முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு: வெளியான தகவல் | Increased Rice Prices In Sri Lanka

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக கிட்டத்தட்ட 36 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் இதுவரை விவசாயிகள் 1,00,000 மெற்றிக் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்துள்ளதாக சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

அம்பாறையில் சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த வட்டார அமைப்பாளர்கள் ஒன்றுகூடல்

அம்பாறையில் சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த வட்டார அமைப்பாளர்கள் ஒன்றுகூடல்

அரிசியின் விலை

எவ்வாறாயினும், நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, தனியார் துறையினர் அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு: வெளியான தகவல் | Increased Rice Prices In Sri Lanka

இதனால் கிரிசம்பா நெல்லின் விலை 105 - 110க்கு இடையில் இருந்ததாகவும் தற்போது 130 ரூபாவை தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW