நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க கோரிக்கை முன்வைத்துள்ள விவசாயிகள்
நெல் அறுவடையை தொடர்ந்து சந்தையை வந்தடைந்தாலும், நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக ஒரு கிலோ நெல்லின் விலை 110 முதல் 120 ரூபாய் வரை குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், உத்தரவாத விலையை நிர்ணயிக்காததுடன் அரசாங்கம் இன்னும் நெல் கொள்முதல் செய்யும் செயல்முறையை தொடங்கவில்லை. அதனால் தனது அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நெல்லுக்கான உத்தரவாத விலை
இந்த நிலையில், நெல்லுக்கு உத்தரவாத விலையை அவசரமாக நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விமல் வட்டுஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும், திருகோணமலைப் பகுதியில் அறுவடையின் பின்னர் நெல் தற்போது சந்தைக்கு வந்திருப்பதாகவும், அதன்படி, சிவப்பு நெல் ஒரு கிலோ 110 முதல் 120 ரூபா வரையிலும் மற்ற வகை நெல் 110 முதல் 115 ரூபா வரையிலும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |