உணவுகள் தொடர்பில் போலி விளம்பரங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 01, 2024 04:26 AM GMT
Laksi

Laksi

சமூக வலைத்தளங்களில் உணவுகள் தொடர்பில் பரவும் போலி விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு, குறிப்பிட்ட  நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இவ்வாறு விளம்பரங்கள் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

போலி விளம்பரங்கள்

அவர் மேலும் கூறுகையில், சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என பொய்யான தகவல்கள் பரவுகின்றன.

உணவுகள் தொடர்பில் போலி விளம்பரங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Fake Advertisements Foods Warning Sl People

பொதுவாக ஒரு உணவில் எதிர்பார்ப்பது சத்தும், நோய்களைத் தாங்கும் ஆற்றலும் தான். நோய்களைக் குணப்படுத்துவதை மருந்து என்கிறோம். உணவால் நோய்களைக் குணப்படுத்த முடியாது.

குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம் சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என விளம்பரம் செய்வது சட்டவிரோதமானது என்றும் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம்

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம்

அரச அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரச அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW