பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம்

Sri Lanka Sri Lankan Peoples Milk Powder Price in Sri Lanka Economy of Sri Lanka
By Mayuri Aug 01, 2024 02:01 AM GMT
Mayuri

Mayuri

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல்

அவர் மேலும் கூறுகையில், பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும்.

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் | Milk Powder Price In Sri Lanka

மேலும் நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW