போர்த்துகல்லில் பொது இடங்களில் புர்கா மற்றும் நிகாப் அணியத் தடை
பொது இடங்களில் மத நோக்கங்களுக்காகப் பெண்கள் அல்லது ஆண்கள் முகம் மறைக்கும் துணிகளை அணிவதைத் தடை செய்யும் சட்ட மூலத்திற்கு லிஸ்பன் போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சேகா கட்சியால் முன்மொழியப்பட்ட இந்த சட்ட மூலத்திற்கு நேற்று(17.10.2025) போர்த்துகல் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆடைகள் முஸ்லிம்கள் பயன்படுத்தும் புர்கா, நிகாப்யை குறிக்கும்.
முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிந்தால் விதிக்கப்படும் அபராதம்
இந்த புதிய சட்டத்தின் கீழ், பொதுச் இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிந்தால் விதிக்கப்படும் அபராதம் 234- 4,671 அமெரிக்க டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்தின்படி, ஒருவரை இவ்வாறு முகத்தை மறைக்கும் ஆடைகளை அணியக் கட்டாயப்படுத்துவது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.
இருப்பினும் விமானங்கள் , இராஜதந்திர வளாகங்கள் போன்ற இடங்களில் இது போன்ற ஆடைகளை அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.