அரிசி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Sri Lankan Peoples Rice Nalinda Jayatissa
By Laksi Dec 24, 2024 07:03 AM GMT
Laksi

Laksi

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு சந்தையில் அரிசித் தட்டுப்பாடு 2025 ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரிசி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | Extension Of Deadline For Import Of Rice

அதன்படி, அந்த காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW