கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஐவர் கைது

Sri Lanka Police Colombo Crime
By Laksi Dec 21, 2024 10:21 AM GMT
Laksi

Laksi

கொழும்புக்கு (Colombo) அருகே போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்ற கலால் திணைக்கள ஊழியர்கள் ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொத்தட்டுவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் சோதனைக்காக சென்றிருந்த கலால் திணைக்கள ஊழியர்கள் அங்கிருந்த பெண்ணொருவரைத் தாக்கி , உடைகளையும் கிழித்துள்ளதாக குறித்த பெண் கொத்தட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் தனது சிறுகுழந்தையையும் கலால் திணைக்கள அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

பிணை உத்தரவு

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தொடர்புடைய கலால் திணைக்கள ஊழியர்கள் ஐவரையும் கைது செய்துள்ளனர்.

கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஐவர் கைது | Excise Department Officials Arrested

மேலும், கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் நேற்றைய தினம் (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW