கல்முனையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்தளங்களை மதிப்பீடு செய்யும் விசேட வேலைத்திட்டம்

Ampara Ministry of Health Sri Lanka Eastern Province Kalmunai
By Laksi Nov 11, 2024 08:41 AM GMT
Laksi

Laksi

கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்தளங்களை மதிப்பீடு செய்யும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினை மதிப்பீடு செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

இரத்த அழுத்த அளவீடு

இதன்போது, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சுகாதார மேம்பாட்டினை மதிப்பீடு செய்யும் பொருட்டு அவர்களின் உடல் திணிவுச் சுட்டி, இரத்த அழுத்த அளவீடு, பல் மருத்துவ சேவை உள்ளிட்ட இரத்தப் பரிசோதனைகளும் இடம்பெற்றது.

கல்முனையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்தளங்களை மதிப்பீடு செய்யும் விசேட வேலைத்திட்டம் | Evaluation Of Health Promotion Sites In Kalmunai

அத்தோடு, சுகாதாரத்தை மேம்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து சாய்ந்தமருது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிக்கா, நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான் ஆகியோருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இந்த நிகழ்வில் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாத், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.ரயீஸ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.எச்.சனூஸ் காரியப்பர், பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஹபீப் முஹம்மட் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery