மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA Nov 11, 2024 07:30 AM GMT

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனைகளைச் சமர்ப்பிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை இன்னும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது.

கடந்த காலங்களில் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான புதிய யோசனைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இருந்து அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த யோசனையை சமர்ப்பிக்க கடந்த 8ஆம் திகதி வரையிலும் மின்சார சபைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அநுர : வெளியான அறிவிப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அநுர : வெளியான அறிவிப்பு

மின்கட்டணம் தொடர்பான பகுப்பாய்வு

அத்துடன் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட யோசனையில் கட்டண திருத்த விலை சூத்திரத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த அறிவித்தல் மின்சார சபைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல் | Information Released Reduction Of Electricity Ceb

இதன் காரணமாக, மின்கட்டணம் குறைப்பது தொடர்பில் மேலும் அதிகமான பகுப்பாய்வு மேற்கொள்வதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக மின்சார சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபையானது இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையிலிருந்து கட்டார் விலகியுள்ளது

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையிலிருந்து கட்டார் விலகியுள்ளது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW