தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Sri lanka election 2024 Parliament Election 2024
By Rakshana MA Nov 11, 2024 06:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை இன்று  நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகின்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமைதி காலம் நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மதுவரி திணைக்களத்திடம் இருந்து விசேட அறிவித்தல்

இலங்கை மதுவரி திணைக்களத்திடம் இருந்து விசேட அறிவித்தல்

தேர்தல் அலுவலகம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் அமைத்த தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Announcement Regarding Parliment Election Campaign

மேலும் தெரிவிக்கையில், நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு ஒரு தொகுதியில் ஒரு தேர்தல் அலுவலகத்தை மாத்திரமே வைத்திருக்க முடியும்.

ஆனால், அந்த அலுவலகங்களில் எதுவும் அலங்கரிக்கவோ அல்லது வேறு எந்த பிரச்சார பணிகளைச் செய்யவோ முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு குழு

இந்த வருடத்திற்கான தேர்தல் கண்காணிப்பில் பங்கேற்கும் ஆசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Announcement Regarding Parliment Election Campaign

ஐரோப்பிய அமைப்பு உள்ளிட்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகமானோர் வரவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையிலிருந்து கட்டார் விலகியுள்ளது

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையிலிருந்து கட்டார் விலகியுள்ளது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW