இலங்கை மதுவரி திணைக்களத்திடம் இருந்து விசேட அறிவித்தல்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Excise Department of Sri Lanka
By Rakshana MA Nov 10, 2024 01:39 PM GMT
Rakshana MA

Rakshana MA

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் மது உற்பத்தியாளர்கள் குறித்த நிலுவைத் தொகையினை செலுத்துமாறு இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வடமாகாணத்தில் பணியாற்றிய நாட்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

வடமாகாணத்தில் பணியாற்றிய நாட்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

அதிகூடிய நிலுவைத் தொகை

இலங்கை மதுவரி திணைக்களத்தின் கூற்றுப்படி, ஏறக்குறைய 10 நிறுவனங்கள் வரி நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலையிலுள்ளது.

இலங்கை மதுவரி திணைக்களத்திடம் இருந்து விசேட அறிவித்தல் | Announcement From Excise Department To Brewers

குறித்த 10 நிறுவனங்களும் 8.5 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கொடுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் முழுத் தொகையினையும் செலுத்தி முடிக்காவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பில் AI உதவியுடன் 5 நிமிடங்களில் கவிதை : சோழன் சாதனை!

மட்டக்களப்பில் AI உதவியுடன் 5 நிமிடங்களில் கவிதை : சோழன் சாதனை!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW