வடமாகாணத்தில் பணியாற்றிய நாட்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்
கடந்த 9 மாதங்களாக வடக்கு மாகணத்தில் கடமை புரிந்த நாட்கள் எனக்கு பொன்னானவை என இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (09) இடம்பெற்ற சுன்னாகம் பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் எனக்கு கீழ் இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகளை பயன்படுத்தி மிக சிறப்பான சேவையை நான் செய்வேன் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அறிவுறுத்தல்கள்
மேலும் தெரிவிக்கையில், மக்கள் நற்காரியங்களிலும், தவறான காரியங்களிலும் ஈடுபடும் போதும் அதற்கான பிரதிபலிப்புகள் இந்த சமூகத்தில் இருந்தே கிடைக்கின்றது.
தற்போதுள்ள அரசாங்கத்தினால், சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் எனக்கு கீழ் இயங்குகின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் இது குறித்து வலியுறுத்தியுள்ளேன்.
இதற்கான நல்ல உதாணமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எவ்வித முறைகேடான விடயங்களும் பதிவாகவில்லை. எனவே, , அதற்கு எதிராக செயல்பட வேண்டிய தேவையும் எமக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்பதாகும்.
அமைதியான தேர்தல்
மேலும், இதுவரை காலப்பகுதியிலும் பதிவாகியுள்ள தேர்தல்கள் சீர்கெட்ட நிலையில் காணப்பட்ட போதிலும், இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் சமாதானமாக நடைபெறுவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைத்துள்ளோம்.
சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அது எமது இயலாமை அல்லது தவறு என்று தான் கூறலாம்.
மேலும் எந்த ஒரு எதிர்ப்புகளும் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு சூழல் தற்போது எங்களுக்கு இருக்கின்றது என இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |