சீன அரசினால் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

Sri Lanka Sri Lankan Peoples China Presidential Update
By Rakshana MA Nov 09, 2024 12:43 PM GMT
Rakshana MA

Rakshana MA

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்காக நிதி கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு 

மேலும், இக் காலப்பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த வீடுகள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் என அனைத்திற்கும் இழப்பீடு வழங்குவதற்காகவே குறித்த நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசினால் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி! | 30 Million Aid From China To Treasury Sri Lanka

இதேவேளை இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த மக்களின் வீடுகளைப் புனரமைப்பதற்காக தேசிய பாதீட்டுத் திணைக்களத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம் அந்த நிதியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட தடுப்பூசி திட்டம்

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட தடுப்பூசி திட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW