நாட்டில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Virus Climate Change Weather School Children
By Laksi Nov 11, 2024 08:09 AM GMT
Laksi

Laksi

நாட்டில் தற்போது சிறுவர்களிடையே காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த சில நாட்களாக, சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதை நான் அவதானித்தேன். வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல். அதுமட்டுமின்றி டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவதைக் கண்டோம்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

இரத்தப் பரிசோதனை 

குறிப்பாக டெங்கு குறித்து அவதானமாக இருக்க வேண்டும். டெங்கு கொடியது என்பதால், 0.1% வீதமானவர்கள் உயிரிழக்கலாம்.எனவே வீடு, பாடசாலை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும்." "சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சலைப் பார்க்கிறோம்.

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Viral Fever Among Children

இது இன்ஃபுளுவென்சா வைரசால் உண்டாகலாம். இது இன்ஃபுளுவென்சா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வேறொரு வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம்.

எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் இது வைரஸ் காய்ச்சல். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்." என்றார்.

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

அட்டாளைச்சேனையில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுப்பு

அட்டாளைச்சேனையில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW