இலங்கையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறை மூலம் நடைபெற்ற தேர்தல்

Vavuniya Sri Lanka Election School Incident
By Rakshana MA Mar 11, 2025 12:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் முதன்முறையாக பாடசாலையில் இலத்திரனியல் வாக்களிப்பு (Electronic voting) இயந்திரத்தினூடாக வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

வவுனியா (Vavuniya) விபுலானந்தா கல்லூரியில் பாடசாலை மட்டத்தில் மாணவர் நாடாளுமன்ற தேர்தல் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று (11) இடம்பெற்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

அர்ச்சுனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா

அர்ச்சுனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா

இலத்திரனியல் வாக்களிப்பு

இந்நிலையில், வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கபிலாசால் அண்மையில் புத்தாக்க போட்டிக்காக கண்டுபிடிக்கப்பட்டு தேசியமட்டத்தில் முதலிடம் பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்களிப்பு இயந்திரத்தை பயன்படுத்தி வாக்களிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறை மூலம் நடைபெற்ற தேர்தல் | Electronic Voting First Time In Sri Lanka

மாணவனினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் இலங்கையின் முதல் முறையாக ஒரு தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தமை இதுவே முதல் தடவையாகும்.

கிண்ணியாவில் இஸ்லாமிய பாரம்பரிய கலைகளின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு!

கிண்ணியாவில் இஸ்லாமிய பாரம்பரிய கலைகளின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு!

இலங்கை தேர்தல் முறை

இலங்கை தேர்தல் முறையில் கடதாசி பாவனை இல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கோடு குறித்த மாணவரினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொறிமுறை முதன் முறையாக மாணவர் நாடாளுமன்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறை மூலம் நடைபெற்ற தேர்தல் | Electronic Voting First Time In Sri Lanka

இந்த ஆரம்ப நிகழ்வு வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், அயல் பாடசாலை அதிபர்கள், கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட பலர் முன்னிலையில் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

இதன்பின்னர் குறுகிய நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் ஊழியர்கள்

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் ஊழியர்கள்

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery