அர்ச்சுனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா

Parliament of Sri Lanka Sri Lankan Peoples Dr.Archuna Chavakachcheri
By Rakshana MA Mar 11, 2025 09:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடாளுடன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக வன்மையாக கண்டித்து இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

2025.03.08 ஆம் திகதி, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தனது நாடாளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கின்றது.

மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாக்கக் கூடும்.

கோவிட்கால ஜனாஸா எரிப்பு..! முன்னாள் இராஜாங்க அமைச்சர் எதிர்ப்பு

கோவிட்கால ஜனாஸா எரிப்பு..! முன்னாள் இராஜாங்க அமைச்சர் எதிர்ப்பு

அறிக்கை 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அர்ச்சுனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா | Jam E Athul Ulama Issues Statement Against Archuna

இவ்வாறான மதம் சார்ந்த முக்கியமான விடயங்கள் தொடர்பாக பொது மன்றங்களில் கருத்து வெளியிடும் போது, மிகுந்த நாகரிகத்தோடும், தெளிவோடும், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் நடந்து கொள்வதே மிகவும் சிறந்ததாகும். 

அர்ச்சுனா உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மதங்கள் பற்றிய முக்கியமான விடயங்களில் தேவைப்படுமாயின் அவற்றை பேசுமுன், அந்தந்த மதங்களின் உயர்பீடங்களிடம் தெளிவு பெற்ற பின்னரே கருத்து தெரிவிப்பது முறையாகும்.

அவ்வாறே இஸ்லாத்தை பற்றிய தெளிவுகள் தேவைப்படுமாயின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் தொடர்பு கொண்டு, முறையாக தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW