போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் ஊழியர்கள்
தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
இதன்படி, தங்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியமையினால் தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிப்புறக்கணிப்பு
ஊழியர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தபால் சேவையில் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் தபால் மா அதிபருடன் கலந்துரையாடிய போதிலும் இது தொடர்பில் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தபால் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனையடுத்து, தபால் தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |