மின்சாரக் கட்டணம் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தற்போதுள்ள புதிய அரசாங்கத்தினால் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் 30சதவீதத்திற்கும் அதிகமாக மின்சார கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மேலும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம் ஒன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
பொருட்களுக்கான விலை
அத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி, இந்த புதிய அரசாங்கத்தினால் நிச்சயமாக அடுத்த 3ஆண்டுகளில் மின்சார கட்டணத்தினை 30சதவீதத்திலும் அதிகமாக குறைக்க முடியும்.
மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |