அரிசி தட்டுப்பாட்டுக்கு கிடைத்த தீர்வு : அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Economy of Sri Lanka Money Rice
By Rakshana MA Dec 01, 2024 05:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் ஏற்பட்டுள்ள நாட்டரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோகிராம் அரிசியின் இறக்குமதி வரியினை 35 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்குமாறு அரிசி இறக்குமதியாளர்களிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த காலங்களில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேறகொண்டிருந்தனர்.

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவிப்பு

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவிப்பு

அரசி இறக்குமதி

நாட்டு அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். இதன் போதே மேற்குறிப்பிட்டவாறு இறக்குமதி வரியை 65 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரிசி தட்டுப்பாட்டுக்கு கிடைத்த தீர்வு : அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Solution For Rice Shortage Request For Gov Sl

மேலும், அரிசி இறக்குமதிக்கு சந்தர்ப்பம் வழங்கினால் 15 நாட்களுக்குள் சந்தையில் நாட்டு அரிசிக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் எனவும், அரிசி இறக்குமதிக்கான விலை மனுவும் கோரப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளிடம் கொள்வனவு செய்வதற்கு போதியளவு நெல் கையிருப்பில் இல்லை எனவும் இறக்குமதியாளர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்:வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்:வெளியான அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW